சிறுநீரகம்
சாதாரணமாக நமது இரு சிறுநீரகங்களும் தினமும் 50க்கும் மேற்பட்ட விஷத்தன்மை உள்ள கழிவுகளை நம் உடலில் இருந்து வெளியேற்றி வருகின்றன. சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்தாள் நம் உடலில் நீர் மற்றும் இதர நச்சு பொருட்களின் அளவு அதிகமாகும். அதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் மூச்சுதிணறல் மற்றும் இருதய வீக்கம் ஏற்படும். இதை மருந்துகளால் மட்டுமே முழுமையாக குணமாக்க முடியாது.
பாதிப்பு அதிகரிக்கும் போது நோயாளிகள் டையாலிசிஸ் (இரத்த சுத்திகரிப்பு) செய்து கொண்டால் அதன் மூலம் உடலில் தேங்கிய கழிவுகள் வெளியேற்றப்பட்டு சகஜ நிலைக்கு வரமுடியும். டையாலிசிஸ் நிரந்தர குணம் தராது. எனவே, சிறுநீரக பாதிப்பிலிருந்து விடுபட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டும் தான் நிரந்தர தீர்வாக அமைகிறது.
சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் டையாலிசிஸ் நிலைக்கு போகும் முன்பே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை(பிரெவேன்டிவ் ட்ரான்ஸ்பிளான்டேஷன்) செய்து கொண்டால் அவர்கள் ஆயுள் காலம் நீருக்கும். அதுமட்டும் அல்லாமல் மாற்றி வைக்கப்பட்ட சிறுநீரகத்தின் ஆயுட் காலமும் நீண்ட காலம் நீடிக்கும். இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முதலில் அவர்கள் தங்களை முழுமையாக பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இரத்த சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம். சிலசமயம் சிறுநீரக தானம் செய்வோரின் இரத்த குரூப் வேறாக இருக்கும். முன்பெல்லாம் வேறு வேறு இரத்த குரூப் உள்ளவர்களிடமிருந்து சிறுநீரகம் பெற்று பொருத்தினால் அதை உடல் ஏற்க மறுத்து பயனற்று போகும் நிலை இருந்தது.
தற்போது நவீன சிகிச்சை மூலம் இரத்த குரூப் பொருந்தவிட்டாலும் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடியும். பிளாஸ்மாபிரிஸிஸ் என்னும் சிகிச்சை முறையால் தம் உடலில் உள்ள கெடுதல் செய்யும் ஆன்டிபாடீஸ்களை அகற்றி விட்டு அதன் பின்பு அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் எந்த இரத்த குரூப் சிறுநீரகத்தையும் நம் உடல் ஏற்று கொள்ளும்.
இந்த முறையான சிகிச்சை மூலம் 90 சதவீதத்திற்கும் மேலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்ய முடியும். முக்கியமாக இந்த வகை சிகிச்சையினால் பயப்படும்படியான பக்க விளைவுகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு 10 என்ற அளவிற்கு கீழ் இறங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் தவிர இரத்தம் ஏற்றக்கூடாது. HLA ஆன்டிபாடி உள்ள நோயாளிகளுக்கு பிளாஸ்மாபிரிஸிஸ் மற்றும் RITUXIMAB மருந்து சிகிச்சையின் மூலம் இந்த ஆன்டிபாடி அளவை குறைத்து சிறுநீரக மாற்று அருவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியும்.
~ டாக்டர்.SPS. ஆனந்தன், சிறுநீரக சிகிச்சை நிபுணர்